
திஹார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
இன்று காலை இவர்கள் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கியது.
எனினும், அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமுலாக்கத்துறை, கடந்த மாதம் 16ஆம் திகதி ப.சிதம்பரத்தை கைது செய்தது.
இதன்காரணமாக அவர் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை திகார் சிறைக்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளனர்.
Leave a Reply