மாலியில் – பிரான்ஸ் ராணுவ உலங்கு வானூர்திகள் விபத்து : 13 வீரர்கள் உயிரிழப்பு!

An NH90 Caiman military helicopter lands next to a temporary forward operating base (TFOB) during Operation Barkhane in Ndaki, Mali, July 29, 2019. REUTERS/Benoit Tessier SEARCH “TESSIER MALI” FOR THIS STORY. SEARCH “WIDER IMAGE” FOR ALL STORIES. TPX IMAGES OF THE DAY

மாலி நாட்டில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரான்ஸின் இரண்டு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 வான் படையினர் உயிரிழந்தனர்.

அந்த நாட்டின் வடக்கு பகுதியை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். போன்ற தீவிரவாதக் குழுக்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

அந்த குழுவினரை பிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் விரட்டியடித்தனர். ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், இந்த தீவிரவாத குழுக்களை முற்றிலும் ஒழிக்க பிரான்ஸ், மாலியின் உள்நாட்டு ராணுவத்துடன் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் வடக்கு எல்லையோரப் பகுதியில் கண்காணிப்பு பணியில், தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் வான்படையின் உலங்குராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதனிடையே, உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *