
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் முழங்காலில் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியதால் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷிகர்தவான் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனினும் கோஹ்லி, ரவிசாஸ்திரியின் ஆதரவுடன் அவர் அணியில் இடம்பிடித்து வருகின்றார்.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் போது ஷிகர் தவானின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து விலகியுள்ளார்.
எனவே ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சித்ததால், தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அவரை மாற்று வீரராக தேர்வு செய்வதை நிறுத்திவிட்டு, அவரது திறமைக்கு மதிப்பளியுங்கள் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply