
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுக்களின் கீழ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய சிங்களே தேசிய அமைப்பினால், இன்று (புதன்கிழமை) பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முந்தல் பகுதியில், பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு கமராக்களில் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் ஏன் அவர் இன்னும் கைது செய்யப்படாதுள்ளார் என புதிய சிங்கள ராவய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அதன் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொதுமக்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் அந்த காட்சிகள் அனைத்தும் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக அந்த பகுதியிலுள்ள மக்கள் முறைப்பாடு செய்துள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply