
ஹிட்லர் பயன்படுத்திய தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை லெபனான் வணிகர் ஒருவர் ஏலமெடுத்துள்ளார்.
ஜேர்மனியில் நடந்த ஏலம் ஒன்றில் ஹிட்லர் பயன்படுத்திய பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஏலத்தில் ஹிட்லர் பயன்படுத்திய தொப்பி, சிகரெட் பெட்டி, தட்டச்சு இயந்திரம் என 10 பொருட்களை லெபனான் வணிகர் அப்துல்லா ஏலம் எடுத்துள்ளார். இவர் சுவிட்சர்லாந்தின் 300 பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிட்லர் பொருட்களை ஏலத்திற்கு எடுத்தது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
”நாஜி ஆதர்வாளர்களின் கைகளில் இந்த பொருட்கள் சிக்கி விடக்கூடாது என்பதாற்கவே இதை ஏலம் எடுத்ததாக” கூறினார்.
மேலும் இந்த பொருட்களை இஸ்ரேலுக்கு நிதி திரட்டும் அமைப்பிற்கு அன்பளிப்பாக அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply