
முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் இடம்பெற்றது.
நேற்று மாலை 06.05மணிக்கு, மணியோசை எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
நாட்டுப்பற்றாளரின் மனைவியும் மூன்று மாவீரர்களின் தாயாரும் மாவீரர் நவம் என்பவரின் சகோதரியுமான மகேஸ்வரன் யோகராணி என்பவர் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றிவைத்தார்.
சம நேரத்தில் ஏனைய மாவீரர்களின் பெற்றோர்களாலும், சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, மாவீரர்களின் நினைவாக, மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான மாவீரர்களினுடைய உறவினர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply