
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காமல் விட்டால் அதனை மூடியிருக்க தான் வேண்டும் என்று விமான போக்குவரத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதனை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த போக்குவரத்து இணை அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காவிட்டால், அதனை மூடியிருக்க தான் வேண்டும்.
ஏனென்றால் இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகள் உள்ளிட்டவற்றில் தரையிறங்கும் அனுமதி இருந்த போதும் இதன் நஷ்டம் தான் தனியார் மயமாக்கும் முடிவை எடுக்க வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply