
ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (வியாழக்கிழமை) இந்தியா செல்கிறார்.
இந்தநிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரான வைகோ டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வைகோவிற்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Leave a Reply