
ஜனாதிபதி கோட்டாபயவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று டெல்லியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கறுப்பு கொடி அணிந்து வைகோ குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இன்றையதினம் இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply