
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், தமிழில் நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி பட பாணியில் உருமாறி வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை உருமாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார், இது நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் உடலில் தனது தலையை உருமாற்றியமைக்கப்பட்டதாக காட்டியது.
அதில் டிரம்ப் கட்டுமஸ்தான உடலுடன் குத்துச்சண்டை உடையை அணிந்திக்கிறார்.
1982ம் ஆண்டில் அறிமுகமான கற்பனையான ராக்கி பால்போவாவின் குத்துச்சண்டை வாழ்க்கையை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான திரைப்படங்களில் ஒன்றான ‘ராக்கி III’ க்கான விளம்பரத்தின் ஒரு அங்கமாக இந்தப் படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
டிரம்பின் ட்வீட் எதை ஊக்கப்படுத்தியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புளோரிடாவில் செவ்வாய்க்கிழமை இரவு பேரணியில் டிரம்ப் தனது உடலமைப்பைப் பற்றி கூறிய கருத்துக்களுக்கு இந்த படம் ஒரு ஒப்புதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நவம்பர் 16 அன்று 73 வயதான டிரம்ப், வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கு அவர் திட்டமிடப்படாத மருத்துவ சோதனை மேற்கொண்டார்.
இதனையடுத்து, டிரம்ப்பிற்கு மார்பு வலி, அவசர அல்லது கடுமையான பிரச்னைகளுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டதாக பல ஊகங்கள் பரவியது. எனினும், அவ்வாறு ஏதும் இல்லை என ஜனாதிபதி மருத்துவர் சீன் கான்லி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தற்போது, அந்த ஊகங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப், எந்த குறிப்பும் இன்றி குறித்த புகைப்படத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply