பசில் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு விடுக்கப்பட்டிருந்த தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 இலட்சம் ரூபாய் நிதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிழற்படம் அடங்கிய 50 இலட்சம் கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுக செல்ல வேண்டும் என்பதனால் அனுமதி வழங்குமாறு பசில் ராஜபக்ஷ தரப்பு மன்றில் கோரிக்கை வைத்தது.

அதன்படி குறித்த சமர்பணத்தை ஆராய்ந்த நீதிபதி டிசம்பர் 5 முதல் 2020 மார்ச் 7 வரை அவருக்கு விதிக்கப்பட்ட பயண தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

அத்தோடு குறித்த வழங்க்கை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் அறிவித்தார்.

இதேவேளை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் தனக்கு எதிரான திவிநெகும விவகார வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *