
முறையான விசாரணை நடைபெறும் வரை பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதி திட்டம் மற்றும் டெப் வழங்குவதை நிறுத்திவைப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
இவை தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் அவை தொடர்பாக விசாரணைகள் நடைபெறும் வரை நிறுத்திவைப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதமும் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply