
பொங்கல் பரிசு 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுப் பொதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்தத் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக இந்த ஆண்டு அரிசி அட்டைகளுக்கு இந்திய மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய் பணமும், பொங்கல் பரிசுப் பொதியும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்காக தமிழக அரசால் 2,363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடி ரேஷன் அட்டை அங்கத்தவர்கள் பயன்பெறவுள்ளனர்.
Leave a Reply