
போர் காரணமாக தமிழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அதனை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அந்தவகையில் மாணவர்கள் கலைத்துறையை மட்டும் தேர்ந்தெடுக்காமல் வணிகம், மருத்துவம், அறிவியல், தொழில்நுட்ப துறையில் தமது நாட்டத்தை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு அவற்றினை எதிர்கால இளைஞர் யுவதிகள் பெற்றுக்கொள்ள ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது கலைத்துறையை தேர்தெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதனாலேயே கலைத்துறை பட்டதாரிகளுக்கு வேலையில்லா பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே மாணவர்கள் 35 விகிதம் கலைத்துறை அறிவை பெற்றுக்கொள்ளும் அதேவேளை, 75 விகிதம் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வணிக துறையில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டார்.
Leave a Reply