
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பகுதியில் 360 பொலிஸார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு பொலிஸார் கோயிலின் அனைத்து நுழைவுவாயில் மற்றும் கோயிலுக்குள்ளும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் காணப்படும் மதஸ்தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
Leave a Reply