யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்ட வரைவு கடந்த 21ஆம் திகதி சபையில் வாசிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

அத்துடன், உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.

இதேவேளை, வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும், முதல்வரின் அதிகாரத்திற்கு அமைவாக எதிர்வரும் 14 நாட்களுக்குள் அது செயல் வடிவம் பெறும் என மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *