
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அரசின் உத்தரவை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2014-ம் ஆண்டில் மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டது.
இந்த தடை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து இந்த தடை தொடர வேண்டுமா? என்பதை ஆய்வு செய்வதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கிதா திங்ரா சேகல் தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றையும் அமைக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து மேற்படி தீர்ப்பாயம் விசாரித்து வந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஆஜராகி, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய தீர்ப்பாயம், விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply