
மதுரையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசும் போது ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு இலவசமாக ஒரு கார் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடந்த கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நடிகனை அரசியலுக்கு வா என அழைக்கும் அவலம் உள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும் ஐ யம் வெயிட்டிங். வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளேன்.
பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம், நாட்டை யார் விரைந்து விற்பது என்பதில்தான்.
கட்சி மீதும், கட்சியினர் மீதும் வழக்கு தொடர்வோர் மீது நாம் தமிழர் ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுப்பேன்.
வழக்கு தொடர்வோர் எங்கள் ஆட்சி அமைவதற்குள் இறந்துவிடுங்கள் இல்லையேல் விளைவுகளை சந்திப்பீர்கள் என பேசினார்.
Leave a Reply