
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பரஸ்பர நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்றே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply