
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு கனடா நிதி உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இரண்டு மில்லியன் டொலர்கள் உதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் பிரான்கோயிஸ் பிலிப்பீ சம்பெகென் இன்றைய தினம் இந்த உதவித் திட்டம் பற்றி அறிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட உலகின் அறுபது நாடுகளில் வெடிக்கப்படாத நிலக்கண்ணி வெடிகள் காணப்படுவதனால் மக்கள் அந்தப் பகுதிகளில் குடியேற முடியாத நிலைமை நீடித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலக்கண்ணி வெடிப்புக்களினால் ஆண்டு தோறும் ஏழாயிரம் பேர் மரணிப்பதுடன் பல்லாயிரக் கணக்கானவர்கள் காயமடைகின்றனர்.
நிலக்கண்ணி வெடி அகழ்வு உள்ளிட்ட சகல செயற்பாடுகளிலும் பால்நிலை சமத்துவம் பேணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Leave a Reply