
முள்ளியவளை – மாஞ்சோலை பகுதியில் கஞ்சா வியாபாரம் மேற்கொண்ட ஆழியவளையினை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிடைத்த விசேட தகவலுக்கு அமைய மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
03 ஆம் கட்டைப் பகுதியில் பேருந்தில் வந்திறங்கிய ஆழியவளையினை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் ஒருகிலோ கேரளா கஞ்சாவினை நான்கு பொதிகளில் வியாபாரத்திற்காக கொண்டு வந்துள்ளார்கள்.
சந்தேகத்தின் பேரில் இவர்களை பிடித்து விசாரித்த போது கஞ்சா வியாபாரத்திற்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இவர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்த கேரளா கஞ்சாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளையினை சேர்ந்த 28 அகவையுடைய பெண் ஒருவரும் 39 அகவையுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் ஆழியவளையில் இருந்து பேருந்தில் கஞ்சா வியாபாரத்திற்காக வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் முள்ளியளை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Leave a Reply