கனடாவில் இருந்து கொழும்பு வந்த தமிழர் கடத்தப்பட்டு கொலை!

கனடாவில் இருந்து கொழும்பு திரும்பிய தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் நேற்று முன்தினம் வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்ட அவரது சடலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்தது. சித்திரவதை செய்யப்பட்ட காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *