
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மீது தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கினை பெங்களூர் நகர பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலின் போது ஜே.டி.எஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நடைபெறுவதற்கு முன்னதாக இது தொடர்பாக ஊடகங்களுக்கு குமாரசாமி, சித்தராமையா, சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்; அத்துடன் போராட்டத்தையும் நடத்தினர் என சமூக ஆர்வலர் மல்லிகார்ஜூன் முறைப்பாடு அளித்திருந்தார். இந்த முறைப்பாடையும் பொலிஸார் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது பெங்களூர் பொலிஸார் இவர்கள் மீது தேச துரோக வழக்கு உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply