குடும்ப தகராறில் முன்னாள் போராளி உயிரிழப்பு: மனைவி கைது

மட்டக்களப்பு- கிரான், கோரக்களிமடு பிரதேசத்தில் கணவன் மீது மனைவி மேற்கொண்ட தாக்குதலில் முன்னாள் போராளியான கணவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்  சந்தேகநபரான மனைவியை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று (வியாழக்கிழமை) இரவு குடும்ப தகராறு காரணமான கணவன் மீது மனைவி தேங்காய் திருவும் திருவலைக் கட்டையால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன்போது கணவன் உயிரிழந்துள்ளார். சம்பவம்  அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மனைவியை கைது  செய்துள்ளனர்.

கிரான்- கோரக்களிமடு முருகன்கோவில் வீதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான 49 வயதுடைய  2 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான் பாலசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *