
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தியா சென்றுள்ள அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளார்.
இதன்போது பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply