
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட சராசரி நாற்பதுக்கு மேல் மற்றும் ஒரே ஆண்டில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குறித்த வீரர்களின் வரிசையில் இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனே இடம் பிடித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியை விருவிருப்பாக முதலில் டெஸ்டில் இருந்து, ஒருநாள் போட்டி வந்தது. ஒரு நாள் போட்டியும் அதிகம் நேரம் இழுப்பதாகவும், ரசிகர்களுக்கு சுவாரசியமாகவும், பரபரப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 20 ஓவர் போட்டி கொண்டு வரப்பட்டது.
இந்த டி20 தொடர்களில் வீரர்கள் பலரும் பல சாதனைகள் படைத்துள்ளனர். இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர் அடித்தது, மேற்கிந்திய தீவு வீரர் கிறிஸ் கெய்லின் முதல் சதம் போன்று பல உள்ளன.
அந்த வகையில் ஒரே ஆண்டில், துடுப்பாட்ட சராசரி 40-க்கு மேலும், ஸ்டிரைக் ரேட் 145-க்கும் மேலும், ஒரே ஆண்டில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலை பிரபல ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கையை சேர்ந்த ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே 2010-ஆம் ஆண்டு 32 டி20 போட்டிகள் விளையாடி 1156 ஓட்டங்கள் குவித்துள்ளார். துடுப்பாட்ட சராசரி 41.28 எனவும் ஸ்டிரைக் ரேட் 152.7 எனவும் 2 சதம் மற்றும் 8 அரைசதம் அடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்சமாக மேற்கிந்திய தீவு வீரர் கிறிஸ் கெய்ல் 2015-ஆம் ஆண்டு 36 போட்டிகளில் 1665 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதே சமயம் இந்திய வீரர் கோஹ்லி 2016-ஆம் ஆண்டு 31 போட்டிகளில் 1614 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனேவை தவிர மற்ற இலங்கை வீரர்களின் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply