
பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள், உரிமைகள் அனைத்தும் சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
இவ்விடயம் தொடர்பாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல சகோதரத்துவத்துடன் பழகும் நாடுகள்.
எனவே இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் கலந்துரையாடலில் ஈடுபடும்போது இலங்கையிலுள்ள ஈழத்தமிழர்கள் வாழும் சில பகுதியிலுள்ள ராணுவத்தை உடனடியாக விளக்கிக்கொள்ள வலியுறுத்த வேண்டும்.
மேலும் பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மேலும் அவர்களின் நிலங்களை ஒப்படைக்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் கோட்டாபயவிடம் வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இனிமேலும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் சிறையில் வாடும் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர்களின் குடும்பங்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு 18ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படியும், கூடுதலாகவும் அரசியல் அதிகாரங்கள் முழுமையாக கிடைக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு இனிமேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஒப்படைக்கவோ அல்லது படகுகளுக்கு உரிய இழப்பீட்டையோ வழங்க வேண்டும்.
கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்கு தடை ஏதும் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்யும் போது, பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மீனவர்களிடையே ஒத்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும்” எனஜி.கே.வாசன் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply