நல்லாட்சி அரசாங்கம் பெட்டி வீடுகளையே மக்களுக்கு வழங்கியது – பிரதமர் மகிந்த ராஜபக்ச

கடந்த அரசாங்கத்தில் அதிகளவான அரசியல் பழிவாங்கல்கள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சிலேயே நடத்திருப்பதாகவும் அது சம்பந்தமான உரிய விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நியாயத்தை நிறைவேற்றுவதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள வீடமைப்பு வசதிகள் அமைச்சில் ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த கடமைகளை பொறுபேற்கும் நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு பேசும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலம் முழுவதும் நல்லாட்சி அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்கள் இன்றி பெட்டி வீடுகளை நிர்மாணித்து அவற்றை மக்களுக்கு வழங்கியது.

தற்போதைய அரசாங்கம் உரிய வேலைத்திட்டத்துடன் சகல வசதிகளுடன் கூடிய வீடுகளை மக்களுக்கு வழங்கும். குறிப்பாக இலங்கையில் காணப்படும் காணி தட்டுப்பாடு காரணமாக மாடி வீட்டு முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விசேடமாக மக்களின் பிரச்சினையை அடையாளம் கண்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வீடமைப்பு திட்டம் ஒன்று உரிய முறைமையின் கீழ் உருவாக்கப்படும் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்து விசாரணை நடத்திய சம்பவம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், சம்பவ இடத்தில் உள்ள சீ.சீ.டி.வி. காட்சிகளை பெற்று உடனடியான விசாரணைகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *