
நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவி வருவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 172 குடும்பங்களை சேர்ந்த 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
61 குடும்பங்களை சேர்ந்த 203 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக 56 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ள நிலையில், இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
Leave a Reply