
புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை சிறையில் அடைப்பதற்காக அரசியல்வாதிகள், நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு இருப்பதாக தாய்நாட்டுக்கான போர் வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமான சகல தகவல்களையும் சாட்சியங்ளுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
படையினரை சிறையில் அடைக்கும் சம்பவங்களின் பின்னணியில் கடந்த அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர்.
5 நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகளுக்கு அதில் தொடர்புள்ளது என்பதை சாட்சியங்களுடன் நிரூபிக்க முடியும் எனவும் அஜித் பிரசன்ன கூறியுள்ளார்.
ஷானி அபேசேகரவை கைது செய்து விசாரித்தால் இது சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் முழு விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்தது. இதனால், இந்த விடயத்துடன் தொடர்புடைய சகல நபர்கள் தொடர்பான தகவல்களை வெளிகொணர உடன்டியாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply