பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதசாரிகள் கடவை தவிர்ந்த ஏனைய இடங்களில் வீதியை கடப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் வீதியை கடக்க பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் டிசம்பர் 31 வரை கடும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதன் பின்னர் குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *