பேருந்து போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்கத் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதிய போக்குவரத்து கொள்கை அறிக்கையில் பொது போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளமையை தாம் வரவேற்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜரத்னே தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

எனவே, இந்த ஆண்டுக்கான பேருந்து போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு எமது சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

அந்த தீர்மானத்தையே தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

தற்போது இலங்கையில் 45,000 தனியார் பேருந்து ஊழியர்கள் உள்ளதுடன் அவர்களது வருமானத்தை பாதுகாப்பதாக ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததாக கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல தனியார் பேருந்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்த கருத்தை தமது சங்கம் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *