
மட்டக்களப்பில் நேற்று கல்லடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.
மட்டக்களப்பு கல்லடியில் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க முயன்ற பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களை (TMVP)பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் விரட்டி அடித்துள்ளனர்.
விடுதலைப் போராட்டத்திற்காக தமது உயிரை விதைத்து சென்ற மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் தினம் கார்த்திகை 27 ஆம் நாளான நேற்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் மிகவும் துக்கத்துடன் அனுஷ்டிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த காலத்தில் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள காணியில் நினைவுத்தூபி ஒன்றை அமைந்து மாவீரர் தினத்தை அனுஷ்டித்தனர்.
இந்த நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் மாவீரர் நிகழ்வுகளை நடாத்த தமிழ் மக்கள் விடுதலிப் புலிகள் (TMVP) கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் வேலூரான் சுபராஜ் தலைமையில் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த போது கல்லடி பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தையும் போராளிகளையும் காட்டிக் கொடுத்து, போராளிகளை கொன்றொழித்த கருணா, பிள்ளையானின் அடிவருடிகளுக்கு எங்கள் வீர மறவர்களின் நினைவு நாளை அனுஷ்டிக்க தகுதி இல்லை என்றும் தூபி அமைந்துள்ள பிரதேசத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் சத்திமிட்டனர்.
இதன்போது கல்லடி மக்களுக்கும் பிள்ளையானின் அடியாட்களும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் கல்லடி மக்களும் இளைஞர்களும் பிள்ளையானின் அடியாட்களை கற்களால் தாக்கினர். இந்நிலையில் பொலிஸாரும் அவ்விடத்துக்கு வருகை தந்து சகலரையும் அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
பொது மக்கள் கூட்டமும் தமக்கு எதிர்ப்பும் அதிகமாகி நிலைமை மோசமடைந்து வருவதனை கண்ட பிள்ளையானின் இளைஞர் அணி உறுப்பினர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அகன்று ஓடிவிட்டனர்.




Leave a Reply