
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ததலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியினை சேர்ந்த கனகரத்தினதிற்கு ஜனாதிபதியின் ஒப்பத்துடன் நியமனக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply