
ஐ.நா.அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த கன்னி விக்னராஜா என்ற குறித்த பெண்ணே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
கன்னி விக்னராஜா, பிறின்ஸ்ரென் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் Bryn Mawr கல்லுரியில் பொருளாதாரத் துறையில் இளமானி பட்டம் பெற்றவராவார்.
இவர் யு.என்.டி.பியின் நாடு, பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்னர் இவரை ஐ.நா.பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரெஸ், ஐ.நா.அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply