
பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்து சோர்ந்துவிட்டீர்களா? அழகாக ஜொலிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அனைத்தையும் மேற்கொண்டு களைத்துவிட்டீர்களா? அழகாக இருக்க ஆசைப்பட்டால், அழகைப் பாழாக்கும் சரும பிரச்சனைகள் வருவதற்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் மேக்கப் மட்டும் ஒருவரை அழகாக்கிவிடாது. நடிகர், நடிகைகள் அழகாக காட்சியளிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் அவர்களது டயட் தான்.
ஆம், ஒருவருக்கு சரும பிரச்சனைகள் அதிகம் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற டயட் தான். இப்படிப்பட்ட டயட்டினால் தான் கருவளையங்கள், முகப்பருக்கள், வறட்சியான சருமம், வெளிரிய சருமம், கருமையான உதடுகள் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. ஒருவரது டயட் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சருமத்தையும் தான் பாதிக்கும்.
ஆகவே ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் வேண்டுமானால், உடலுக்கு ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து வெளியேற்றும் மற்றும் பழைய செல்களுக்கு பதிலாக புதிய சரும செல்களை உற்பத்தி செய்யும் திறன் முக்கியம். அதற்கு பல்வேறு வைட்டமின்கள் தேவை. அந்த வைட்டமின்களை நல்ல ஆரோக்கியமான டயட்டின் மூலம் பெற முடியும். இப்போது சரும பிரச்சனைகளையும், அந்த சரும பிரச்சனைகள் வராமல் இருக்க செய்ய வேண்டியவைகள் குறித்தும் காண்போம்.
முகப்பரு
பெரும்பாலானோர் கஷ்டப்படும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். முகப்பருக்கள் 16-22 வயதிற்குட்பட்டவர்களுக்கு அதிகம் வருவதற்கு காரணம் உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்கள் என நம்பப்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் காரமான உணவுகளும் முகப்பருக்களுக்கு காரணம். எனவெ முகப்பருக்களைப் போக்க டயட்டில் இஞ்சி, மஞ்சள், ஆலிவ் ஆயில் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கருவளையங்கள் மற்றும் முதுமை சுருக்கங்கள்
நீங்கள் அதிகளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொண்டால், என்ன நடக்கும் என்று தெரியுமா? இதனால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் மற்றும் முகத்தில் சுருக்கங்கள் தான் வரும். பிரட், சர்க்கரை, அரிசி, கோதுமை மாவு போன்றவை சருமத்தின் ஆயுட்காலத்தை வேகமாக அழிக்கும் உணவுகளாகும். அதில் சர்க்கரை சரும கொலாஜனை அழித்து, சுருக்கங்களை உண்டாக்கும். ஆகவே கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வராமல் இருக்க நினைத்தால், சர்க்கரையைத் தவிர்த்திடுங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளைஅளவாக உட்கொள்ளுங்கள்.
வெள்ளை திட்டுக்கள் மற்றும் சொரியாசிஸ்
முகத்தில் வெள்ளைத் திட்டுக்கள் மற்றும் சொரியாசிஸ் வருவதற்கு காரணம் கல்லீரல் பிரச்சனைகள் தான். கல்லீரல் தான் உடலில் இருந்து அழுக்குகள் மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. ஆனால் அதற்கு போதுமான நீர் உடலில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், கல்லீரலால் சரியாக செயல்பட்டு, இரத்தத்தில் இருந்து அழுக்குகளை பிரித்தெடுக்க முடியும். ஒருவேளை உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால், கல்லீரலின் சுத்தப்படுத்தும் செயல்பாடு பாதிக்கப்பட்டு, முகத்தில் வெள்ளையான திட்டுக்களை உண்டாக்கும். ஆகவே சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும், சுத்தமாகவும் இருக்க நினைத்தால், தினமும் 3 லிட்டர் நீரைக் குடியுங்கள்.
Leave a Reply