
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிற்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதென தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஐ.தே.க தலைவராக ரணிலே தொடர்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிகப்பட்டுள்ளது.
மேலும் ஐ.தே.க தலைவர் ரணில், சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருடனான பேச்சிலும் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டு விட்டது என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வாரம் ஐ.தே.கவின் செயற்குழு கூடி இந்த முடிவை அங்கீகரிக்கும் எனவும் , கட்சி தலைமை குறித்த முடிவு பின்னர் எடுப்பதென தீர்மானமாகியுள்ளதாகவும் ஐ.தே.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply