
யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரனில் நேற்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காமினி என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரனுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இரவு நேரக் கடமைக்காக பொலிஸ் உத்தியோகத்தர் சென்றிருந்தார்.
எனினும் இன்று காலை அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply