
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத்தலைவராக சஜித் பிரேமதாசவும், கட்சியின் உதவித் தலைவராக ரவி கருணாநாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply