
சென்னை விமான நிலையத்தில், கொரியாவை சேர்ந்த நபர் ஒருவரிடம் சந்தேகத்தின் பெயரில் சோதனை நடத்தியதில், 1.56 கோடி மத்திப்புள்ள 4கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரியாவை சேர்ந்த நபர், Hong Kong-ல் இருந்து Cathy Pacific என்ற விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வந்ததும் நுழைவு வாயிலுக்கு வேகமாகவும், வித்தியாசமாகவும் நடத்து சென்ற அவரை சுங்கத்துறை அதிகரிகள் பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது பதிலளித்த அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால், சந்தேகம் வலுக்கவே அவரது பையில் சோதனையிட்டுள்ளனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை. அதன்பின், அவரின் காலணியை கழற்றி சோதனையிட்டத்தில், காகிதம் மூலம் பல அடுக்குகளாக தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், அவரது பேன்ட் பாக்கட்டில், 1கிலோகிராம் அளவில் தங்கம் இருந்துள்ளது.
அந்த நபர் உடல் பயிற்சி ஆசிரியராக இருப்பதாகவும். இந்த தங்கம் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் கொடுக்க வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply