
கிளிநொச்சியில் வரலாறு காணாத வகையில் செல்லம் சின்ன வெங்காயம் விலையினால் அதிகரித்து செல்வதாக வர்த்தகர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர். மிக வேகமாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து செல்கின்றது. இதுவரை காலமும் ரூபா 180 தொடர்க்கம் 250 வரை அதி கூடிய விலையாக விற்பனையாகி வந்த சின்ன வெங்காயத்தின் இன்றைய விலை 450 ரூபாவிற்கு அதிகமாக விற்பனை ஆவதாக தெரிவிக்கின்றனர்.
நாட்டில் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி மற்றும் நோய் தாக்கம் காரணமாக இவ்வாறு விலை அதிகரித்தள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் முதலாக இவ்வாறு அதிகரித்த விலைக்கு சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சின்ன வெங்காயம் 450 ரூபாவாகவும், பெரியவெங்காயம் 140 ரூபாவிற்கும், நடுத்தர வெங்காயம் 180 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் உள்ளுர் கடைகளில் சின்ன வெங்காயம் 500 ரூபாவிற்கு அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் எனவும், இதனால் வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் சிரமங்கள் காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தமது வீட்டு தேவைகளிற்காக ஒரு கிலோ வரை கொள்வனவு செய்த மக்கள் இன்று 100 கிராம் வரையில் மாத்திரமே பெற்றுச் செல்வதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சின்ன வெங்காயம் பல சுகாதார தொற்றுக்கள் உள்ளிட்ட நோய்களிற்கு உகந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் மக்கள் தமது உணவு தேவைக்காகவும், சுவைக்காகவும் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பானது மாவட்டத்தில் உள்ள பாமரை மற்றும் நடுத்தர குடும்பங்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது.
இதேவேளை வெங்காய உற்பத்தியில் அதிகம் வடக்கு மாகாணமே முன்னிலையில் காணப்படுகின்றது. யாழ்ப்பாண வெங்காயத்திற்கு நாட்டில் அதிக கிராக்கி காணப்படும் நிலையில் வடமாகாணத்திலேயே சின்ன வெங்காயத்திற்கு அதிகரித்துள்ள விலையானது ஏனைய மாவட்டங்களில் மேலும் அதிகமாக விற்பனையாக கூடிய சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

Leave a Reply