ஜார்க்க‌ண்ட் சட்டப் பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்!

ஜார்க்க‌ண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதன்படி 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மாலை 3 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில்  மொத்த‌மாக  37 லட்சத்து 83 ஆயிரத்து 55 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அத்துடன் 13 மாவட்டங்களில் 3ஆயிரத்து 906 வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த தேர்தலில்  பாரதிய ஜனதா 12 தொகுதிகளில் போட்டியிடும் அதேவேளை ஜார்க்கண்ட் , முக்தி மோர்ச்சா,  காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணிகள் நான்கு, ஆறு மற்றும் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *