
அமெரிக்காவில் டிஎன்ஏ பரிசோதனை மூலம் 20 ஆண்டுகள் கழித்து இரண்டு சகோதரிகள் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அவர்களின் பூர்வீகமும் தெரியவந்துள்ளது.
ப்ளோரிடாவை சேர்ந்தவர் கிரேஸ் (23). இவர் சீனாவை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் கிரேஸ் உருவத்தில் 100 சதவீதம் சீனாவை சேர்ந்தவர் போல இல்லை, நீ உண்மையில் யார் என அவரின் காதலர் அவரிடம் கேள்வியெழுப்பி வந்தார்.
இதையடுத்து டிஎன்ஏ செயலி மூலம் பரிசோதனை செய்து கொண்ட கிரேஸுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருசேர காத்திருந்தது.
ஏனெனில் பரிசோதனை முடிவில், கிரேஸ் 80 சதவீதம் சீன வம்சாவளியை சேர்ந்தவர் எனவும் 20 சதவீதம் தெற்காசியாவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.
இதோடு அந்த செயலி மூலம் மவுரா (23) என்ற பெண்ணின் டிஎன்ஏ கிரேஸ் டிஎன்ஏவுடன் ஒத்து போவது தெரியவந்தது.
அதாவது மவுராவும், கிரேஸும் சகோதரிகள் என்பது உறுதியானது.
இதை தொடர்ந்து சமீபத்தில் கிரேஸும், மவுராவும் முதல் முறையாக சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
இந்த சந்திப்பின் போது இருவரின் வளர்ப்பு தாய்களும் உடன் இருந்தனர்.
அப்போது தான் கிரேஸும், மவுராவும் தெற்கு சீனாவில் பிறந்தவர்கள் என்பதும் குழந்தையாக இருக்கும் போதே இருவரும் தத்து கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
அதன்படி கிரேஸ் ப்ளோரிடாவில் வாழ்ந்து வந்தார், மவுராவோ வடக்கு கரோலினாவில் வசித்து வந்திருக்கிறார்.
இருவரும் எதற்காக தத்து கொடுக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் உண்மையான பெற்றோரின் தற்போதைய நிலை குறித்த விபரம் தெரியவில்லை.
Leave a Reply