
தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க தற்போதைய சட்ட விதிகளில் வழிவகையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை இணை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா பதிலளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து அவர் தெரிவிக்கையில், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க தற்போதைய விதிகளின்படி வழிவகையில்லை.
எனினும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை வேளாண்மைத் துறை அமுல்படுத்தி வருகிறது.
விவசாயி கடன் அட்டை திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஏழை விவசாயிகளுக்கு அவா்களின் நிலம் மற்றும் பயிா் வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
வேளாண்மை கடனுதவி இலக்கு 9 இலட்சம் கோடியில் இருந்து 13.5 இலட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் அட்டைகள் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் அளிக்கப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினா்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
Leave a Reply