
நடிகர் ராதாரவி பா.ஜ.கவின் செயல் தலைவகர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளார்.
பா.ஜ.க செயல் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (சனிக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.
இதன்போது பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஜே.பி நட்டா முன்னிலையில், பா.ஜ.கவில் இணைந்தனர். இதில் நடிகர் ராதாரவியும் ஒருவராவார்.
நயன்தாரா குறித்து அவதூறு கருத்து தெரிவித்தமைக்காக நடிகர் ராதாரவி தி.மு.கவில் இருந்து கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
தி.மு.கவில் இருந்து விலகிய அவர், அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் ஜூன் மாதத்தில் அ.தி.மு.கவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply