
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குற்றச்சாட்டை சுவிஸ் தூதரகம் நிராகரித்துள்ளது.
சுவிஸ் தூதர அதிகாரி கடத்தப்பட்டமை குறித்த விசாரணைகளுக்கு சுவிஸ் தூதரகம் முறையான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் தற்போதைய உடல்நிலையானது, விசாரணைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளதாக சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பம் தொடர்பாக கரிசனை கொள்வதாகவும் அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு கடத்தப்பட்ட அவரிடம் பல்வேறு விடயங்கள் குறித்து கடத்தல்காரர்கள் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் சுவிஸில் தஞ்சம் கோரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறித்தே தூதரக அதிகாரியிடம் இவ்வாறு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இறுதியில் இதனை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply