
புதிய முதலீடுகளை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடவுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாடு அமா்வு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.
இதன்போது 5,027 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் 20,351 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய நிலை ஏற்படும்.
இதேவேளை அமெரிக்க நிறுவனங்களில் ஏற்கெனவே போடப்பட்ட 3 புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கான திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அத்துடன் 3 திறன் மேம்பாட்டு மையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply