
இந்திய நாட்டின் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கணக்கெடுப்பு முடிவுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிடப்பட்டது.
இதன்படி நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு கால ஆண்டில் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜிடிபி மிக மோசமாக சரிந்துள்ளதன் மூலம் மத்திய பாஜக அரசு மோசமான சாதனையை செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமான படுகுழிக்கு தள்ளிவிட்டது. இந்தியா மிக மோசமான இருண்ட காலத்துக்கு சென்றுவிட்டது என்றும் அக்கட்சியினர் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply