
மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள சிவசேனா தனது பெரும்பான்மையை நிரூப்பிப்பதற்காக நம்பிக்கை வாக்கு கோருகிறது.
இன்று (சனிக்கிழமை) நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதனிடையே பேரவையின் இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திலீப் வால்ஸே பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply