
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஐவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு யாழ்.நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஏழு கிராம் போதைப்பொருளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதை பொருளை பாவனைக்கு உட்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் போதை பொருளை பாவனைக்கு உட்படுத்திய நிலையில் மூவரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 1 கிராம் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளுக்கு அமைய யாழ்.புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply